Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளைக் கொடி விவகாரம்; பொய் என்று கூறிய சரத் பொன்சேகா தற்போது ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்

வெள்ளைக் கொடி விவகாரம்; பொய் என்று கூறிய சரத் பொன்சேகா தற்போது ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்

11 months ago
in செய்திகள்

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய உரையாடல் காணொளி தன் வசத்தில் இருப்பதாகவும், விரைவில் அதனை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார்.

பொன்சேகா, சில முன்னாள் படை அதிகாரிகளுடன் சேர்ந்த ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது, 2025 அக்டோபர் 17 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச, எரிக் சொல்ஹைம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதி, ஐசிஆர் பிரதிநிதி ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் பயங்கரவாதிகளை சரணடைய வைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வெள்ளைக்கொடி ஏந்தி வருதல் சம்பவம் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொன்சேகா, பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே தனது கட்டளை எனவும், சரணடைவதை ஏற்கின் பிரபாகரனை மஹிந்த ராஜபக்ச முதலமைச்சராக மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச சவேந்திர சில்வாவுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியதை பற்றியும், அதனை சவேந்திர சில்வா கையாளும் போது ஊடகக் கமராக்கள் இருப்பதை மறந்துவிட்டார் என்றும் அவர் கூறினார். இந்த அழைப்பை பாதுகாப்பு செயலாளர் ஏற்படுத்தியதாகவும், வெள்ளைக்கொடி சம்பந்தப்பட்ட உரையாடல்களை அவர் கேட்டதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

பொன்சேகா, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, 2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரட்ரிக்கா ஜேம்ஸ் என்ற பத்திரிகையாளர் கேள்வி கேட்டதும், அவர் உண்மையாகவே வெள்ளைக்கொடி ஏந்துபவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தும் பொறுப்பு கூறவில்லை என்பதையே மட்டுமே பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர், தன்னை எதிர்த்து பொய் செய்தி பரப்புவதற்காக வெள்ளைக்கொடி வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து காணொளி மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிடுவதாகவும் கூறினார்.

அதேசமயம் இறுதி போர் சமயத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற கதை பொய்யான விடயமாகும் என்றும், இது சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸின் போய் என்றும் சரத் பொன்சேகா 2023 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
26 வகையான பாம்பு விஷங்களை முறியடிக்கும் ஒட்டகக் கண்ணீர்!

26 வகையான பாம்பு விஷங்களை முறியடிக்கும் ஒட்டகக் கண்ணீர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு