Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ஹரிணி

இன்று இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ஹரிணி

10 months ago
in செய்திகள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் தனது விஜயத்தின் போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் (14) பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு பிரதமர் விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் அமரசூரிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்கள் குடியரசின் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
Next Post
யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு