முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை வெளியிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








