கேகாலை பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோட்டலொன்றுக்குள் ஏர் ரைபிள் ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலுக்கு வந்த இருவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.







