Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம, மாதம்பே, ஊர்காவற்துறை, ஹபராதுவ, மதவாச்சி, கம்பஹா மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தம்புத்தேகம, எரியகம பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதியதில் சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதுடைய இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மாதம்பே, புலாத் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதிய விபத்தில் 52 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பாதையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 59 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, மதவாச்சி, யாகவெவ பகுதியில் பவுசர் மோதி மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா, உடுகம்பொல பகுதியில் டிப்பர் வாகனம் மோதி மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்தை, கிரிலாவல பகுதியில் வேன் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், ஹபராதுவ, பலுவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி 50 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
Next Post
மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு