சட்டவிரோத சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நெவில் வன்னியாராச்சியின் பிணை மனுவை இன்று(17) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நிராகரித்து, 2025 ஒக்டோபர் 31 வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
28 மில்லியன் ருபாய் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் நெவில் வன்னியாராச்சி ஒக்டோபர் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.








