யாழ்ப்பாணத்தில் கடந்த 1990, அக்டோபர்,30, ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின்
35, ம் ஆண்டு நினைவு கூட்டம் 2025, அக்டோபர்,18, சனிக்கிழமை காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்” என நினைவுகூர்ந்த வேளையில் அங்கு உரையாற்றிய வடமாகாண முஸ்லிம் அமைப்பு ஆய்வாளர் சட்டமானி பி எம் முஜூபர் ரங்மான் அவர்கள் தெரிவித்த கருத்து தமிழ் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு அவர் விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் தங்க நகைகளை எடுப்பதற்காகவே அவர்களை வெளியேற்றினர் என கூறியுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,
35, ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இனை கண்டுபிடித்துள்ளார். யாழில் இருந்து வெளியேறும் போது சகல முஸ்லிம் மக்களும் அவர்கள் கையில் தூக்க கூடிய பொருட்களை எடுத்து செல்லுமாறே அங்கு கூறப்பட்டது.
அதற்கு அமைய எந்த ஒரு முஸ்லிம் மகனும் முதலில் நகைகளையும், பணத்தையும், எடுத்தபின்பே உடைகளை கூட கையில் தூக்க கூடிய அளவு எடுத்து சென்றிருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்தவிடயம்.

அவர்கள் தமது இருப்பிடங்கள், வீடுகளில் தளபாடங்கள் பொருட்கள் என்பவற்றை தாம் விட்டுச்சென்றதாகவே அவர்கள் அப்போது தெரிவித்தனர். எவருமே தமது தங்க நகைகளை விட்டு வந்ததாக கூறவில்லை.
இப்போது 35, வருடங்கள் கடந்து புதுக்கதைகளை கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியே இது.
சிலவேளை விடுதலைப்புலிகளில் இருந்து இராணுவம் எடுத்து தற்போது ஒரு தொகை தங்க நகைகள் அரசால் பொதுமக்கள் அடையாளம் காட்டி பெறுமாறு கூறியதால் அதில் தமது நகைகளும் உள்ளதாக கூறி அதை பெறுவதற்கான கதையாக இதை கூறினாரோ தெரியாது.
கேட்பவன் கேணயன் எனில் எருமை மாடுகளும் ஏறப்பிளேன் ஓட்டும் என்பதற்கு இவருடைய இந்த கதையும் பொருந்தும் என்று அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.








