Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி2025; மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியால வீராங்கனைகள்

இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி2025; மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியால வீராங்கனைகள்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

2025ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி (Asian Youth Games 2025) ஜப்பானின் டோக்கியோ நகரில் தற்போது நடைப்பெற்று வருகிறது. ஆசியாவின் பல நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பரபரப்பான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற பெண்கள் கபடி பிரிவு ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் மோதின. இதில் இந்தியா அணி மிகுந்த திறமையுடன் விளையாடி, 73 – 10 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக பல இளம் வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்திய நிலையில், மட்டக்களப்பின் கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகராசா நிஷாளிணி, அணிக்கு தலைவியாகப் பங்காற்றியுள்ளார்.

அத்துடன் அதே பாடசாலையை புஸ்பராசா திருஷ்ஷனா மற்றும் தெய்வேந்திரன் பிதுர்ச்சா ஆகியோரும் வீராங்கனைகளாக விளையாடியுள்ளனர்.

இந்தப் போட்டி அக்டோபர் 15 அன்று ஆரம்பமாகி, அக்டோபர் 25 வரை நடைபெறும் என ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான இறுதி ஆட்டங்கள் அக்டோபர் 25 அன்று நடைபெறவுள்ளன.

இம்முறை இலங்கை அணியில் மட்டக்களப்பின் கோரகல்லிமடு பகுதியைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது, மட்டக்களப்பு விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக உள்ளூர் விளையாட்டு இரசிகர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பின் கோரகல்லிமடு போன்ற கிராமப் பகுதிகளில் இருந்து வந்த மாணவிகளுக்கு, சர்வதேச அளவில் நடைபெறும் இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல — இது உழைப்பின் வெற்றி, முயற்சியின் பலன், நம்பிக்கையின் சின்னம்.

மணல் வழிகளில் ஓடிய அவர்களின் கால் இன்று சர்வதேச கபடி அரங்கில் பதிந்துள்ளது. கல்வியுடன் விளையாட்டையும் இணைத்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய இந்த இளம் வீராங்கனைகள், “வாய்ப்பு எங்கிருந்தும் வரலாம் — உழைப்பு இருந்தால் மட்டும் போதும்” என்பதை நிரூபித்துள்ளனர்.

கிராமத்தில் வளர்ந்த ஒரு சிறுமி உலக அரங்கில் தன் நாட்டின் ஜெர்சியை அணிந்து நின்றால் — அது அந்த கிராமத்திற்கும், அந்த நாட்டிற்கும் பெருமை.

அவர்களின் பயணம் இன்னும் முடிவடையவில்லை; இது துவக்கம் மட்டுமே.
இவர்கள் காட்டும் உறுதி, ஒவ்வொரு இளம் மாணவிக்கும் ஒரு செய்தியை வழங்குகிறது —

“நீ எங்கிருந்து வந்தாய் என்பதல்ல முக்கியம்,
நீ எங்கே செல்ல விரும்புகிறாய் என்பதுதான் உன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
Next Post
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவானார் சனே டகாய்ச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவானார் சனே டகாய்ச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு