Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஹோட்டலில் சடலமாக மீட்பு

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஹோட்டலில் சடலமாக மீட்பு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை பெண் ஒருவர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஸ்ரவஸ்தி மாவட்டத்திலுள்ள ஹோட்டலில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

71 வயதான கொந்தாகொட சில்வா என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து புத்த மத தலங்களைப் பார்வையிட சென்ற 46 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவில் அவர் ஒருவராக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் (22) குறித்த பெண் தனது ஹோட்டல் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராமையினால் ஏனைய சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் அறையைத் திறந்தபோது, ​​அந்தப் பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஊழியர்கள், முகாமையாளருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் அவர் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு அமைய, இயற்கை மரணம் என தெரிய வந்துள்ளதாக ஸ்ரவஸ்தி பொலிஸ் கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முறையான முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் சுற்றுலா குழு உயிரிழந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நடவவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவை சுட்டு படுகொலைசெய்யத் திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவை சுட்டு படுகொலைசெய்யத் திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு