Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!

53 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எத்தனை சவால்கள் மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் நிலவினாலும், நமது கலாச்சாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா இன்று மட்டக்களப்பு “கோல்டன் ரிவர்” விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகரசபையின் முல்வர் சிவம்பாக்கியநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது இளங்கலைஞர் விருதுகளும் 11பேர் நூல்களுக்கான சிறந்த எழுத்தாளர் விருதினையும் 17கலைஞர்கள் இவ்வாண்டுக்கான வித்தகர் விருதுகளையும் இதன்போது பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின்போது மூன்று இனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,

கடந்த கால தொழில்நுட்ப வசதியற்ற காலகட்டத்தையும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒப்பீடு செய்து பேசினார். “முன்னைய காலத்தில் தொலைபேசிகள் வீடுகளில் மட்டுமே நிலையாக இருந்தன.

ஆனால் இன்று மொபைல் போன்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பில் இருக்க முடிகிறது. இவ்வாறான நவீன காலத்தில், நாம் நமது கலாச்சாரத்தையும் சிந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். எழுதக்கூடிய திறமை உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை தைரியமாக எழுதி வைக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த 30 ஆண்டுகால யுத்தக் காலத்திலும் கிழக்கு மாகாணத்தின் கலாச்சாரம் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர் என அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழும் இந்த பன்முகத்தன்மை கிழக்கு மாகாணத்தின் தனிச்சிறப்பாகும்.

இது மற்ற மாகாணங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. அரசியல்வாதிகள் அரசியலைச் செய்யலாமே தவிர, மக்களின் ஒற்றுமையையோ கலாச்சாரத்தையோ யாராலும் அழிக்க முடியாது. நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும்”.

“ஒவ்வொரு தலைமுறையிலும் மூத்தவர்கள் ‘இன்றைய இளைஞர்கள் சரியாக இல்லை’ என்று சொல்வது இயல்பான ஒரு மனித பரிணாம வளர்ச்சியாகும். எனவே, புதிய தலைமுறையினரைக் குறை கூறாமல் அவர்களின் வேகத்தையும் தொழில்நுட்ப அறிவையும் புரிந்து கொண்டு அவர்களை நாம் வழிநடத்த வேண்டும். இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் கலைஞர்களைக் கௌரவிப்பது மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமையளிக்கிறது” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

October 29, 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

October 29, 2026
மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

October 29, 2026
24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை!

October 29, 2026
ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!

October 29, 2026
13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
செய்திகள்

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

October 29, 2026
Next Post
மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு