மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (24) பிற்பகல் திடீரென பெய்த மழையுடன் கூடிய காற்றினால் ஆரையம்பதி பகுதியில் சில கூரைகள் சேதமடைந்துள்ளன.
மேலும், ஆரையம்பதி தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் ஒன்று விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

மழை இன்றும் தொடர்ந்து பெய்துக்கொண்டிருக்க, காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளதெனப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மற்றும் சில இடங்களில் மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








