இந்தியாவில் இடம்பெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீரவீராங்கனைகள் இன்று (28) காலை தாயகம் திரும்பினர்.
குறித்த விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 40 பதக்கங்களை வென்றுள்ள இலங்கையின் வீர வீராங்கனைகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தாயகம் வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














