கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு கோப்பின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்குவதற்காக ரூ.10,000 இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, ஆணையகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

சந்தேகநபர் இன்று (30) காலை வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.








