இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் இந்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை – மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவன் என்ற இந்த மூவரையும் நேற்றுத் தனிப்படை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் மூன்று பேரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.








