நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான ஆதம்பாவா அஸ்பர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெளிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நீக்கத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இம்மாதம் 24ஆம் திகதி தெளிவத்தாட்சி அலுவலரால் ஒப்பமிடப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.









