வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலங்கை கடற்படையினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








