Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணி; அரச காணி என ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை அகற்றிய நபர்

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணி; அரச காணி என ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை அகற்றிய நபர்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அரச காணி தொடர்ச்சியாக அத்துமீறி பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும், அம்முயற்சி முறியடிக்கப்பட்டு வருவதும் யாவரும் அறிந்த விடயமாகும்.

இக் காணி கரையோர இரயில் மார்க்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்பதற்காக 1924 ஆம் ஆண்டு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட அரச காணியாகும். பிபி மட 6054 இலக்க நில அளவை வரைபடத்தில் மேற்படி காணி அரச காணி என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் காணி மழை காலத்தில் கல்லடி பகுதியில் பெருகும் வெள்ளநீர் வடிந்தோடி வந்து தேங்கி மட்டக்களப்பு வாவியை சென்றடையும் பிரதான வடிச்சல் ஆகும். அதுமட்டுமின்றி இது ஒரு சதுர்ப்பு நிலமாகவே காட்சியளிக்கிறது. இக் காணியில் மட்டக்களப்பு வாவியின் இரண்டு சங்கிலி அகலமுடைய நீரேந்து ஒதுக்கு, அப்பகுதியில் உள்ள பிரதான வாய்க்காலின் ஒரு சங்கிலி அகலமுடைய நீரேந்து ஒதுக்கு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒதுக்கு காணிகள் உள்ளடங்குகின்றன. இவற்றை அடையாளப்படுத்தும் எல்லை கற்களும் புலத்தில் காணப்படுகின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இக்காணிக்கு பலரும் சொந்தம் கொண்டாடி, போலியான காணி உறுதி மற்றும் ஒப்பங்களை பெற்று குறித்த காணியை சுவீகரிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளதாக கல்லடி வாழ் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 04.11.2025’ம் திகதி குறித்த காணிக்காக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரு தனிநபர்களுக்கு இடையே நடந்த வழக்கில் ஒருதரப்பினருக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து, பதிவாளரினால் குறித்த காணி உங்களுடைய காணி என (ரிட் ஓர்டர்) தீர்ப்பு கிடைக்கப்பெற்ற தரப்பினருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் அன்றைய நாளே குறித்த காணியை அடைக்கும் வேலையையும் அந்த தரப்பினர் முன்னெடுத்திருந்தனர்.

இதனால் 05.11.2025’ம் திகதி கல்லடி வாழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டதோடு, 08.11.2025 அன்று குறித்த கிராம சேவகரினால் இது அரசகாணி என அரச காட்சிப்படுத்தல் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச தரப்பால் ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை குறித்த காணியை அடைக்கும் குழுவினர் அங்கிருந்து ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை கிழித்து அகற்றியுள்ளர்.

இது தொடர்பில் கல்லடி வாழ் பொது மகன் ஒருவர் தெரிவிக்கையில், இதற்க்கு சில அரச அதிகாரிகளும் உடந்தை எனவும், அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கல்லடி வாழ் பொதுமக்களின் நிலை தற்போது பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
தம்புள்ளையில் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

தம்புள்ளையில் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு