Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தொடர்பில் விசனம் வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச்சபை!

இலங்கை தொடர்பில் விசனம் வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச்சபை!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் உள்நாட்டுப்போருடன் தொடர்புபட்டவகையில் 60,000-100,000 பேர் வரையில்
வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இருப்பினும் அவற்றில் பெரும்பான்மையான
சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச்
சபை விசனம் வெளியிட்டுள்ளது.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய
நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் ‘வலிந்து காணாமலாக்கப்பட்டோர்’ நிலவரத்தை உள்ளடக்கி சர்வதேச மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் கடந்த 40 வருடகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப்போருடன் தொடர்பு பட்டவ கையில் சுமார் 60,000-100,000 பேர் வரையில் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கக்கூடுமென தாம் மதிப்பிட் டிருப்பதாகத் தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை, இருப்பினும் இவற்றில் பெரும்பான்மையான சம்பவங்கள் தொடர் பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கடந்த 6 வருடகாலமாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி அவரது அலுவலகத்திலி ருந்து புறப்பட்டதன் பின்னர் காணாமல்போனார். அவர் காணாமல்போவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அப் போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை விமர்சித்து கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பல வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும்,
பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்படவில்லை. எனவே இதுகுறித்து
முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமைக்குக் காரணமானவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
Next Post
மட்டு காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரி கைது!

மட்டு காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு