சூரிய குடும்பத்தில் ஏராளமான கோள்கள் இருக்கின்றன. அதில் ஒரு சில கிரகங்கள் பற்றிய ஆய்வுகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விஞ்ஞானிகள் பூமியைப் போல, உயிர்கள் வாழ தகுதியுடைய கிரகம் ஏதாவது இருக்கிறதா என்பதை பற்றி தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில்தான் செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் ராக்கெட் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதைக் கடந்து பூமியை போலவே மற்றொரு கிரகம் நிச்சயமாக சூரியக்குடும்பத்தில் இருக்கும் என்று பலரும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
இதற்கிடையே, Planet Nine என்ற ஒரு கிரகம் இருப்பதைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக, சூரிய குடும்பத்தில் Pluto என்பது கிரகம் இல்லை என்பது அறிவிக்கப்பட்டதில் இருந்து, Planet Nineஇல் நிலப்பரப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, இந்த கிரகம் இருப்பதாக விவாதம் நடந்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் இதைப் பற்றிய தீவிரமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். ஜப்பானைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் இப்போது இது சம்மந்தப்பட்ட புதிய தியரி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அது கிட்டத்தட்ட பூமியைப் போலவே, அதன் அளவிலேயே இருக்கிறதாக கூறப்படுகிறது.
மேலே கூறியுள்ளது போல, பூமியைப் போல இந்த கிரகம் இருக்கிறதா என்பது பற்றி பல கட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது வரை, நமது சூரியக் குடும்பத்தில், சூரியனிடம் இருந்து 132 வானிலை யூனிட்டுகள் தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள ஒரே கிரகம் இதுதான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த கண்ணோட்டத்தில், ப்ளூடோ கிரகம், சூரியனில் இருந்து 40 வானிலை யூனிட்டுகள் தொலைவில்தான் இருந்தது.
ஜப்பான் நாட்டில், கிண்டாய் பல்கலைகழக விஞ்ஞானிகளான பேட்ரிக் சோஃபியா லைகாவ்கா மற்றும் தேசிய வானியல் ஆய்வகத்தைச் சேர்ந்த டகாஷி இடோ ஆகியோர், அஸ்ட்ராநமிக்கல் ஜர்னலில் வெளியிட்ட அறிக்கையில் மற்றொரு விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். சூரியனைச் சுற்றி இருக்கும் ஒன்பது கிரகங்களுக்கு அருகிலேயே, சாய்வான சுற்றுப்பாதையில், பூமியைப் போலவே ஒரு கிரகம் இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
சமீபத்தில், விஞ்ஞானிகள் நெப்டியூன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு கொஞ்சம் தள்ளி இருக்கும் டிரான்ஸ்-நெப்டியூன் ஆப்ஜக்ட்டுகளில் (Trans-Neptunian objects) கொஞ்சம் வித்தியாசமான குழு நடவடிக்கையை (Clustering Behaviour)கண்டறிந்துள்ளனர். இதில் மறைந்திருக்கும் ஒரு உலகம் இருக்கலாம் என்றும், அதில் உயிர்கள் வாழ இன்னொரு கிரகம் இருக்கலாம் என்பதை பரிந்துரைத்தனர்.
ஏற்கனவே, நெப்டியூன் கிரகத்துக்குத் கொஞ்சம் அப்பால், ஐஸ்கட்டி பாறைகள் மற்றும் டிவார்ஃப் கோள்கள் போன்ற TNOக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாம் பார்க்கும் தொலைவு வரை, சூரியனிடம் இருந்து 30 வானியல் யூனிட்டுகள் வரை நீண்டுள்ளன. இதை கைபர் பெல்ட் என்றும், இதில் உள்ளவற்ற TNOக்கள் என்றும் அழைக்கின்றனர்.
நெப்டியூன் கிரகத்தின் ஈர்ப்புவிசையின் தாக்கத்தைக் கடந்து TNOக்களின் எண்ணிக்கை
அதிகமாக சாயும் தன்மை கொண்ட ஆப்ஜக்ட்களின் எண்ணிக்கை
வினோதமான சுற்றுப்பாதையில் இருக்கும் ஒரு சில விசித்திரமான ஆப்ஜக்ட்கள்
பூமியைப் போலவே இருக்கும் இந்த கிரகத்தின் மாஸ் (Mass) பூமியை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல், சூரிய குடும்பத்தின் கோட்டில் இருந்து, 30 டிகிரி சாய்வான கோணத்தில் உள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளனர்.