சர்வதேச பொலிஸார் (‘இண்டர்போல்”) தற்போது குற்றவாளிகளுக்கு சிவப்புப் பிடியாணைகளை வழங்க மறுத்து வருகின்றனர் எனக் குற்றவியல் மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுவதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை திறந்தமற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
148 சிவப்பு பிடியாணைஇந்த குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குற்றம் மற்றும் சட்டப்
பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட – “பாதாள உலகத்தின் கீழ் குற்றம்
சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் படங்கள், வசிக்கும் இடங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.தற்போது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து 148 சிவப்பு பிடியாணைகளை பெற்றுள்ளோம். அவர்களில் சிலரை இலங்கைக்கு அழைத்து வரவாய்ப்பு கிடைத்தது.12 பேர் இந்தியாவில் சிறையில் உள்ளனர்.
பாதாளக்குழுக்கள் முழுமையாக வெளிநாட்டில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பணத்திற்காகக் கொலை
செய்யும் குழுவையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.அவர்களுக்கு உதவுவோர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த காலங்களில் மோதல்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான பல வழக்குகள் உள்ளன. இது தொடர்பான கோப்புகள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச பொலிஸார் நிராகரிப்பு எனினும் சிலரின் செயற்பட்டால் அதிகாரிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அவ்வாறான கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என முயற்சிக்கின்றனர். ஒருவரைக் கைது செய்யப் போகும் போது, அவர் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு செல்வது இப்போது எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது.சமீபத்தில், ஹந்தயா என்ற நபர் குற்றம் நடந்த இரு நாட்களுக்குள் துபாய்க்கு சென்றுள்ளார்.இவ்வாறான குற்றவாளிகள் தொடர்பில்நாங்கள் சர்வதேச பொலிஸாரிடம் சிவப்புப் பிடியாணை கேட்டால், அவர்கள் அதனை மறுக்கின்றனர்.
ஒரு சந்தேக நபரை உங்கள் நாட்டிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாங்கள் ஒருபோதும் கொண்டு வந்து ஒப்படைக்க மாட்டோம் என அழுத்தமாக அவர்கள் தெரிவிக்கின்றனர்அதேபோல், நாங்கள் கோரிய 05 சிவப்பு அறிவிப்புகளை அவர்கள் நிராகரித்துள்ளனர்.” – எனத் தெரிவித்துள்ளார்.