Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் வெள்ள நீரை கடலுக்குள் அனுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபை மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் போக்குவரத்துச்செய்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதுடன் இடம்பெயரும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் ஆற்று நீரின் அளவும் அதிகரித்து மக்களின் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ள நிலையில் அவற்றினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த.கயசீலன் உட்பட போரதீவுப்பற்று,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், ஊழியர்களும் கலந்துகொண்டு இந்த செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.

இதேநேரம் கடுமையான மழைபெய்வதன் காரணமாக போக்குவரத்தினை மேற்கொள்வோர் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை வெல்லாவெளி வீதியில் வெள்ள நீரோட்டம் உள்ள பகுதியில் தடம்புரண்டதினை அவதானிக்கமுடிந்தது.

அதன் சாரதி பாதுகாக்கப்பட்டபோதிலும் வாகனத்தினை மீட்பதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
குறைவடையப்போகும் வாகனங்களின் விலைகள்; அறிவித்தது இலங்கை மத்திய வங்கி

குறைவடையப்போகும் வாகனங்களின் விலைகள்; அறிவித்தது இலங்கை மத்திய வங்கி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு