Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு வழியா நடந்துடுச்சு: ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கார் கடமையை முடித்த கலாநிதி!

ஒரு வழியா நடந்துடுச்சு: ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கார் கடமையை முடித்த கலாநிதி!

3 years ago
in சினிமா, செய்திகள்

Kalanithi Maran Gifted Car to Anirudh (அனிருத்துக்கு கார் கொடுத்த கலாநிதி மாறன்) ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அனிருத்தை சந்தித்து கலாநிதி மாறன் செக்கையும், போர்ஷே பரிசாக வழங்கினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இதுவரை உலக அளவில் 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

குறிப்பாக ரஜினிகாந்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதன் காரணமாக ரஜினி கொஞ்சம் அப்செட்டில் இருந்தார். தற்போது ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியிருப்பதால் ரஜினி கம்பேக் கொடுத்துவிட்டார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கூறிவருகின்றனர். அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அதேபோல்தான் கலாநிதி மாறனும். இந்தப் படம் அவருக்கு பெத்த லாபத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ கார் மற்றும் ஒரு செக் நெல்சன் திலீப்குமாருக்கு போர்ஷே கார் மற்றும் ஒரு செக் என பரிசுகளை அள்ளி வழங்கினார். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகின.

ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்கில் ஜெயிலர் படத்தின் லாபத்திலிருந்து நூறு கோடி ரூபாய் இருந்ததாக சிலரும்; அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் தொகை அதில் இருந்ததாக சிலரும் கூறினர். அதேபோல் நெல்சன் திலீப்குமாருக்கும் அடுத்த படத்துக்கான அட்வான்ஸைத்தான் அந்த செக்கில் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதில் எவ்வளவு உண்மை என தெரியவில்லை.
ரஜினி, நெல்சன் திலீப்குமாருக்கு பரிசு கொடுக்கப்பட்டதை அடுத்து அனிருத்துக்கு ஏன் இன்னும் பரிசு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. மேலும் ஜெயிலர் படத்தின் மேக்கிங்கில் நெல்சனும், நடிப்பில் ரஜினியும் நன்றாக செய்திருந்தாலும் படத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றது அனிருத்தின் இசைதான். எனவே அவருக்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அனிருத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் அவருக்கும் ஒரு செக்கை பரிசாக கொடுத்தார். அதுமட்டுமின்றி போர்ஷே, பிஎம்டபிள்யூ கார்களை நிறுத்தி வேண்டிய காரை எடுத்துக்கொள்ள சொன்னார். அதனையடுத்து அனிருத் போர்ஷே காரை தேர்ந்தெடுக்க அவருக்கு அந்த கார் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஒருவழியாக அனிருத்துக்கும் செக்கையும், காரையும் கொடுத்து கலாநிதி தனது கடமையை முடித்ததாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
அடாவடிக்கு அடங்கப்போவதில்லை; சம்பந்தன் திட்டவட்டம்!

அடாவடிக்கு அடங்கப்போவதில்லை; சம்பந்தன் திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.