Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்கள் குறித்து தகவல் சேகரிப்பு

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்கள் குறித்து தகவல் சேகரிப்பு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியின் பின்னர் மாவட்ட மட்டத்தில் இது தொடர்பான விசேட நடமாடும் சேவையொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். 

அதற்கமைய, குறித்த தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், அனர்த்த நிலைமை காரணமாக சிலரது வாகனங்கள் மற்றும் ஆவணங்களும் அழிவடைந்துள்ளதாகவும், அந்த தகவல்களையும் பெற்றுக்கொண்டு உரிய எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

அதன்படி, தான் வசிக்கும் கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தருக்கு இது குறித்து அறிவிக்குமாறும், அவர் ஊடாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தெளிவுபடுத்தி பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு பல்வேறு துறைகள் மூலம் சரியான அறிக்கைகளை பெற்றுக்கொள்வது இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார். 

நிலவும் சூழ்நிலையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதால், இது குறித்து அவதானம் செலுத்தி விசேட அலகொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

அதற்கமைய, 0707188866 என்ற வட்ஸ்எப் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட ஆணையாளர் நாயகம், குறித்த வாகனங்கள் மற்றும் ஆவணங்களின் ஏதேனும் சாட்சிகள் தம்மிடம் இருப்பின், அந்த சாட்சிகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், அது எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலகுவாக அமையும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
“நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டு DM, Poineer Eastern Campus நடத்திய இரத்ததான முகாம்

"நாட்டில் ஏற்பட்ட பேரிடரிற்கு உதிரம் கொடுத்து , உயிரைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் மட்டு DM, Poineer Eastern Campus நடத்திய இரத்ததான முகாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.