Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன ‘மஞ்சள் அனகொண்டா’ கண்டுபிடிப்பு

7 months ago
in செய்திகள்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ‘மஞ்சள் அனகொண்டா’ குட்டி, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்வன பூங்காவின் பராமரிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னரே இந்தக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கடத்தி வரப்பட்ட மஞ்சள் அனகொண்டா உட்பட 4 வகையான 6 பாம்புகளைக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். இவை கடந்த 2025.09.15 அன்று பராமரிப்பிற்காகத் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைக்கப்பட்டன.

சுமார் ஒரு வயதுடையதும், ஒன்றரை முதல் இரண்டு அடி நீளமானதுமான இந்த அனகொண்டா குட்டி, ஊர்வன பூங்காவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதே காணாமல் போனது. மிருகக்காட்சிசாலையிடம் இருந்த இலங்கையின் ஒரேயொரு மஞ்சள் அனகொண்டா இதுவாகும்.

இது குறித்து கடந்த 7 ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தவறுதலாகப் பெட்டியின் கதவை மூடாமல் விட்டதால் குட்டி வெளியே சென்றிருக்கலாம் எனப் பராமரிப்பு ஊழியர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஊழியர்களை ஈடுபடுத்தி மிருகக்காட்சிசாலை முழுவதும் தேடுதல் நடத்திய போதிலும், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பராமரிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (16) அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இத்தகைய பின்னணியிலேயே, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் அனகொண்டா குட்டி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
Next Post
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு