Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றி

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றி

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றிபெறச்செய்யப்பட்டது.

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு நேற்றைய தினம் (17) பிரதேசசபையின் தவிசாளர் இ.கிரேசகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய அமர்வில் பிரதி தவிசாளர் கபில்நாத் உட்பட பிரதேசசபையின் 15 உறுப்பினர்கள் நேற்றைய தினம் சபை அமர்வில் கலந்துகொண்டதுடன் ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை.

இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி அனைத்து உறுப்பினர்களும் தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் அமர்வு தவிசாளரின் தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கூட்டறிக்கை கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன் தீர்மானங்களும் தவிசாளரினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டினை விட வருமானம் கூடியதாக இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 10 வட்டாரங்களுக்கும் சமமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்மொழியப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 16 உறுப்பினர்களில் 09 பேர் ஆதரவாகவும் 6பேர் நடுநிலை வகித்ததுடன் ஒருவர் அமர்விற்கு சமூகமளிக்கவில்லை.

இதனடிப்படையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுடன் உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நான்காவது உழவர் சிலை திறப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நான்காவது உழவர் சிலை திறப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு