Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நத்தார் பொதிகள் சோதனையில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நத்தார் பொதிகள் சோதனையில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான விசேட நத்தார் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் நேற்று (19) சுகாதாரப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையின் போது பாரிய உணவுப் பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகப் பழுதடைந்த ஐஸ்கிரீம்களை, உற்பத்தி நிறுவனத்திடம் மீள ஒப்படைப்பதாகக் கூறி அதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, அதே ஐஸ்கிரீம்களை மோசடியான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தமை இதன்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நுகர்வுக்கு உதவாத நிலையில் காணப்பட்ட அனைத்து ஐஸ்கிரீம்களும் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக அழிக்கப்பட்டன. மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட, சம்மாந்துறையில் இயங்கும் அரச சார்பு விற்பனை நிலையம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, நிலையத்தின் பொறுப்பாளர் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் சுகாதாரப் பிரிவு எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து கடுமையாகச் செயலாற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!

September 20, 2026
மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!

September 20, 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
Next Post
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு