Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக மாவட்ட மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கடற்றொழில், போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சுக்களின் செயலாளர்கள், உரிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை இதன்போது விடுத்தார்.

வீடுகள் மற்றும் பயிர் சேதங்களுக்கான நட்டஈடு வழங்கல், பாதுகாப்பு நிலையங்களின் செயற்பாடுகள், மக்களை மீளக்குடியேற்றல், வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. நட்டஈடு வழங்கும் போது எவரும் விடுபடாத வகையில், தகுதியுள்ள அனைவருக்கும் அந்தப் பலனைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மக்களை மீளக்குடியேற்றல் மற்றும் அதற்காகத் தேவையான காணிகளை அடையாளம் காணுதல் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பிரதான மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வீட்டுத் திட்டங்கள் குறித்து தனியானதொரு திட்டத்தை வகுக்கவும், இது தொடர்பில் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெரும்போக விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன புனரமைப்பு, நட்டஈடு மற்றும் விதை நெல் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அதேபோல், சேதமடைந்த கால்நடைப் பண்ணைகள் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க உதவுதல், மீன்பிடித் தொழிலை வழமைக்குத் திருப்புதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை விரைவில் வழங்கி முடித்தல் ஆகியன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 6, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!

August 6, 2026
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு
செய்திகள்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

August 6, 2026
பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 6, 2026
Next Post
யூரியா பையில் வைத்து கொத்து ரொட்டி விற்பனை; மன்னாரில் உணவகம் சீல்

யூரியா பையில் வைத்து கொத்து ரொட்டி விற்பனை; மன்னாரில் உணவகம் சீல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.