Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குழந்தை டயப்பர்கள் பயன்படுத்தும்போது கிழிந்து போதல் மற்றும் மக்கிப் போதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையத்தளத் தகவல்கள் குறிப்பிடப்படாமல், விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி, மொத்தமாக விநியோகித்ததாக குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொட்டாவை வர்த்தக நிலையத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டை வர்த்தக நிலையத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை டயப்பர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட லேபிள் தகவல்களை சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், டயப்பர்களைப் பயன்படுத்தும்போது கிழிதல் உள்ளிட்ட தரக் குறைபாடுகள் ஏற்பட்டால், பொருளின் பொதியையும் கொள்வனவு செய்த பற்றுச்சீட்டையும் பாதுகாத்து, 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹவுத்தி தாக்குதல் தீவிரம்; அமெரிக்கா எச்சரிக்கை!

September 20, 2026
மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!

September 20, 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு