Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

மருந்து மீது இலங்கை குற்றச்சாட்டு; சர்வதேச ஆய்வகப் பரிசோதனையில் நிரூபிக்க கோரும் இந்திய நிறுவனம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஒண்டன்செட்ரோன்’ (Ondansetron) ஊசி மருந்துத் தொகுதிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதிக்குமாறும், அதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் இந்தியத் தயாரிப்பு நிறுவனமான ‘மான் பார்மாசூட்டிகல்ஸ்’ (Maan Pharmaceuticals) இலங்கை சுகாதார அமைச்சுக்குத் தெரிவித்துள்ளது.

வாந்தி மற்றும் அது சார்ந்த உபாதைகளுக்காக நோயாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊசி மருந்தின் 4 தொகுதிகளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்க தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை கடந்த 13ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.

கண்டி தேசிய மருத்துமனையின் நுண்ணுயிரியல் பிரிவு மேற்கொண்ட ஆரம்பகட்ட சோதனையில், இந்த மருந்துகளில் கிருமிகள் அடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததே இதற்குக் காரணமாகும்.

அத்துடன், IDH எனப்படும் கொழும்பு தேசிய தொற்றுநோயியல் தடுப்பு நிறுவகத்தில் அண்மையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளர்கள் உயிரிழந்தனர்.

அவர்களுக்கான சிகிச்சையின் போது இந்த குறிப்பிட்ட ஊசி மருந்து வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையிடம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்களுக்கும் குறித்த ஊசி மருந்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இது தொடர்பாகச் சுகாதார அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ள இந்திய உற்பத்தி நிறுவனம், மருந்து மாதிரிகளைச் சர்வதேசப் பரிசோதனைக்கு உட்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பரிசோதனைக்கு அனுப்பப்படும் மருந்து மாதிரிகள் இலங்கையில் உரிய தரம் மற்றும் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துவது இலங்கைச் சுகாதாரப் பிரிவினரின் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.