Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலநிலையால் பாதிக்கப்பட்ட 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு முதற்கட்ட நிதி

காலநிலையால் பாதிக்கப்பட்ட 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு முதற்கட்ட நிதி

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘டித்வா’ புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா நிதியை, முதற்கட்டமாக 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டில், அரசாங்கத்தினால் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் நிதியுதவியாக, ஒரு அலகிற்கு 2 இலட்சம் ரூபா வீதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘டித்வா’ புயலால் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த வணிகங்களை அடையாளம் காண்பதற்காக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரவு அமைப்பின் ஊடாக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட சுமார் 10,000 கைத்தொழிலாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில், பிரதேச செயலக மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 531 கைத்தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக 106.2 மில்லியன் ரூபா நிதி, கம்பஹா, கொழும்பு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது:

நாட்டின் கைத்தொழில் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதிசெய்து, பாதிக்கப்பட்ட கைத்தொழிலாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகப் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய பலமானதொரு கைத்தொழில் துறையைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை உணர்ந்து, அதற்கான பொறிமுறையும் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
யாழ் தேவி ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ் தேவி ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.