Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது

வாகரை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது

6 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நேற்று (23) நடைபெற்ற 7 ஆவது சபை அமர்வில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது 10 வாக்குகளால் நிறைவேறியது.

வரவு செலவு திட்டம் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது இதில் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 06 உறுப்பினர்கள் நடுநிலையாகவும் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறித்த அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

19 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினர் ஆக 10 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் நடுநிலையாக வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வுக்கு கலந்து கொள்ளவில்லை.

குறித்த சபையில் பிரதி தவிசாளர் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்தவராவார்.

இதேவேளை சபையின் ஆட்சிக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்திருந்தது. ஆனால் குறித்த அமர்வில் கலந்து கொள்ளமையானது தமக்கு ஏமாற்றத்துடன் கவலையளிப்பதாக தவிசாளர் கருத்து தெரிவித்தார்.

தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்கள் என்ன பதில் கூறப் போகின்றார்கள் என்ற கேள்வியும் சபையில் எழுப்பப்பட்டத. அத்துடன் இவர்கள் நேன்றைய அமர்வில் கலந்து கொள்ளாமல் பிரிதொரு நிகழ்வுக்கு (பிரசாசக்தி கூட்டம் )செல்வதாக மூன்று பேரும் விடுமுறை கடிதம் வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கான விடுமுறையானது சம்பளமற்ற விடுமுறையாக கணிக்கப்படுவதாகவும் சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கட்சி பேதமின்றி வாகரைப் பிரதேச சபையின் 10 வட்டாரங்களுக்கும் மக்களின் நலன் கருதி நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும் என்று தவிசாளர் கருத்து தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!

June 17, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

June 17, 2026
சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு; பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு; பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்

June 17, 2026
இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா
செய்திகள்

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா

June 17, 2026
ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

June 17, 2026
Next Post
யாழில் போதைப்பொருளுடன் கைதான மாணவர் உட்பட 10 பேருக்கும் புனர்வாழ்வு மையம்

யாழில் போதைப்பொருளுடன் கைதான மாணவர் உட்பட 10 பேருக்கும் புனர்வாழ்வு மையம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.