நைஜீரியாவின் லாகோஸின் பிரதான துறைமுகத்திலிருந்த வணிகக் கப்பலொன்றிலிருந்து 31.5 கிலோகிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கப்பலிலிருந்த 22 இந்திய பணியாளர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ஷல் தீவுகளில் இருந்து வந்த எம்.வி. அருணா ஹுல்யா கப்பலில் இருந்தே இந்த பெருந்தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய போதைப்பொருள் சட்ட அமுலாக்க அமைப்பின்செய்தித் தொடர்பாளர் பெமி பாபா பெமி அறிக்கையொன்றில் இந்த பறிமுதலை உறுதிப்படுத்தினார்.
ஐரோப்பா மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி மையமாக நைஜீரியா நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.








