Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஸோஹரா புஹாரி பதவி நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஸோஹரா புஹாரி பதவி நீக்கம்

5 months ago
in செய்திகள்

கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரான ஸோஹரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம். நிசாம் காரியப்பர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டத்துக்கு, எதிர்க்கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாக எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருந்த நிலையில், அதனை மீறி ஸோஹரா புஹாரி அந்த வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை, கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணானதாகும்.

இதனையடுத்து, கடந்த 2025 டிசம்பர் 31ஆம் திகதி, கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாகக் குறிப்பிட்டு, அவரின் கட்சி உறுப்பினர் பதவி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் சத்தியகடதாசி வாக்குமூலமாக விளக்கம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவ்வித விளக்கமும் அல்லது சத்தியக்கடதாசியும் சமர்ப்பிக்கப்படாததன் காரணமாக, குற்றச்சாட்டுகளை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகக் கருதி, கட்சி ஒழுக்க நடைமுறைகளின்படி, அவரின் கட்சி உறுப்பினர் பதவியை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதுடன் இது இறுதியானதும் மாற்றமற்றதுமான தீர்மானமாகும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்; ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்; ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு