Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்வி மறுசீரமைப்புகள் சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்படும்; பிரதமர் ஹரினி

கல்வி மறுசீரமைப்புகள் சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்படும்; பிரதமர் ஹரினி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகச் சிலாபம் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் நேற்று (16) மாதம்பை செடெக் (SEDEC) நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வின்போது, 176 பாடசாலைகளையும் சுமார் 76,000 மாணவர்களையும் கொண்ட சிலாபம் கல்வி வலயம் குறித்த சுருக்கமான அறிமுகத்தைச் சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வைத்தார். கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வடமேல் மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்தோடு, கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதோடு, கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தயார்நிலை குறித்துப் பிரதமரின் கவனம் ஈர்க்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தவறுகளை இனங்கண்டு அவற்றைச் சரிசெய்து முன்னெடுக்கப்படுகின்ற புதிய கல்வி முறையின் கீழ், பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பேணப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பானது, கல்வி மறுசீரமைப்பைக் குழப்ப முயற்சிக்கும் தரப்பினரின் நோக்கங்களை முறியடிக்கும் அளவிற்குப் பலமானதாக இருக்கின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய வரவுசெலவுத் திட்ட நிதி, இக்கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் வளங்களின் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

6ஆம் தரக் கல்வி மறுசீரமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். கல்வியை ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகும்” எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பி.எம்.சி.கே. வன்னிநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, பாடசாலை அதிபர்கள், மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
நோபல் பரிசு விவகாரம்; நோபல்குழு அறிக்கை வெளியீடு

நோபல் பரிசு விவகாரம்; நோபல்குழு அறிக்கை வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.