நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது . ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என நோபல்குழு தெரிவித்துள்ளது.
வெனிசியூலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ , தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .
இதற்கு விளக்கம் அளித்து நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பதக்கம் அல்லது பரிசுத் தொகையை என்ன செய்தாலும் , பரிசைப் பெறுபவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரே , நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியலில் தொடர்ந்து இருக்கிறார்
ஒரு பரிசு பெற்றவர் என்ன செய்யலாம் என்பது குறித்து நோபல் அறக்கட்டளையின் சட்டங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை . இதன் பொருள் , பரிசு பெற்றவர் இந்தப் பொருட்களை வைத்திருக்க , கொடுக்க , விற்க அல்லது நன்கொடை அளிக்க சுதந்திரம் இருக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ , அறிவிக்கப்பட்டவுடன் மாற்றவோ அல்லது எந்த நிலையிலும் இரத்து செய்யவோ முடியாது . இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .








