Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யார் இந்த அசாத் மௌலானா?

யார் இந்த அசாத் மௌலானா?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்திய இராணுவத்தோடு இயங்கிய EPRLF அமைப்பை குடும்ப பின்னணியாக கொண்ட அசாத் மௌலானா நீண்டகாலமாக EPDP உறுப்பினராக டக்ளஸ் தேவானந்தவுடன் இயங்கி வந்தார்.
தினமுரசு ஆசிரியர் அற்புதனை வீழ்த்தி தினமுரசை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் தினமுரசில் டக்ளஸ் தேவானந்தா அசாத் மௌலானாவை பணியாளராக சேர்த்து கொண்டார்.

டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் அரச மர முந்திரிகை கூட்டுத்தாபன தலைவரின் பணியாளர் குழுவிலும் அசாத் மௌலானா பணியாற்றி இருந்தார்.
சம காலத்தில் 2004 ஆம் ஆண்டு கருணா குழு இராணுவ உளவு சேவைக்கு இணைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இராணுவ அதிகாரிகளே கருணா குழுவின் மொழிபெயர்பாளர்களாக இருந்தார்கள்.

இந்தியாவிலிருந்த ENDLF, மட்டக்களப்பில் இயங்கிய புளொட், புளொட் மோகன் குழு , ராசிக் குழு உட்பட பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலரும் கருணா குழுவில் இணைக்கப்பட்டு துணைப்படையாக விரிவாக்கப்பட்டு இயங்க தொடங்கி இருந்தது.
இந்த சூழ்நிலையில் கிழக்கு மொழிநடை தெரிந்த மொழிபெயர்ப்பாளரின் அவசியம் உணரப்பட்ட புலனாய்வு துறையுடன் (MI) தொடர்பிலிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையுடன் அசாத் மௌலானா 2006 ஆம் ஆண்டு சித்திரை மாதம் EPDP யிலிருந்து கருணா குழுவிற்கு இடம்மாற்றப்பட்டான்.

இதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் பாதுகாப்பு அமைச்சில் கோட்டாபாய ராஜபக்‌ஷ மற்றும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோரை அசாத் மௌலானா கருணா குழுவுடன் முதன் முதலில் சந்தித்து இருந்தான்.
ஆங்கிலத்தில் நடைபெற்ற மேற்படி 3 மணித்தியால கூட்டத்தில் கருணா குழுவை இராணுவ தேவைக்கு எப்படி பயனப்டுத்துவது என பேசப்பட்டதாக அசாத் மௌலானா தனது சாட்சியத்தில் பதிவு செய்து இருக்கின்றார்.

குறித்த சந்திப்புக்கு தொடர்ந்து கருணா குழு பேச்சாளராக BBC,Reuters போன்ற ஊடகங்களில் அசாத் மௌலானா பேச தொடங்கினார். இராணுவ புலனாய்வு பிரிவினர் கருணா குழுவின் பெயரில் தொடங்கிய தமிழ் அலை பத்திரிகைக்கு பொரளை விமான தள சூழலிலில் அலுவலகம் உருவாக்கப்பட்டு அந்த அலுவலகம் கூட அசாத் மௌலானா பொறுப்பில் விடப்பட்டது.

அதே காலத்தில் கருணா குழுவிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் MI பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கணசேனவுக்கும் பிள்ளையானுக்குமான தொடர்பாடல் மற்றும் நிதி கையாளுதல் பணிகளும் அசாத் மௌலானாவிடம் வழங்கப்பட்டு இருந்தன.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிள்ளையான், அசாத் சாலே ஆகியோரின் உறவுகளும் வளர்ந்து பிள்ளையான் மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் குறித்த காலத்திலேயே மாறினார்கள்.

இதையெல்லாம் மறைத்து விட்டு அசாத் மௌலானா தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது அலுவலக பணியில் சேர்ந்தான் என பிள்ளையான் பதட்டத்தில் பேசுவதில் எந்தவித உண்மையும் இல்லை.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
வெளிவந்துள்ள சிறைச்சாலை அதிகாரி பற்றிய தகவல்கள்!

வெளிவந்துள்ள சிறைச்சாலை அதிகாரி பற்றிய தகவல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.