Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரியை தப்பியோடவைத்த 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரியை தப்பியோடவைத்த 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிசாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது தடுத்து கைகலப்பில் ஈடுபட்டு வியாபாரியை தப்பி ஓட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்புல் தோட்டம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை (17) மாலை 4.30 மணியளவில் பொலிசார் முற்றுகையிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 62 வயதுடையவரை 180 மில்லி கிராம் கசிப்புடன் கைது செய்து கொண்டு செல்வதற்கு முயற்சித்த போது அவரின் உறவினர்களான பெண்கள் உட்பட்ட குழுவினர் பொலிசாரை தள்ளி வீழ்த்தி தடுத்து கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து வியாபாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலையில் பொலிசாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டதை அடுத்து பொலிசார் அவர்களை வீடியோ படம் எடுத்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இந்த நிலையில் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பி ஓடிய நிலையில் அவரை கரடியனாறு பொலிசார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்ய விடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
Next Post
வளிமண்டல மாற்றம்; 23 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கில் மழை

வளிமண்டல மாற்றம்; 23 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கில் மழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு