Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி ரணில் விடுத்த முக்கிய பணிப்புரை!

ஜனாதிபதி ரணில் விடுத்த முக்கிய பணிப்புரை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது என்றும் அதிபர் வலியுறுத்தினார்.

நேற்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுக நிகழ்விலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் செயற்திறனான நிர்வாகத்தை ஸ்தாபிப்பதில் ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கும் வகையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கை 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

07 வருடங்களின் பின்னர் இன்று இந்த தேசிய கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடுவது அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக குறிப்பிடலாம்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிதி அமைச்சு மற்றும் திட்ட முகாமைத்துவத் திணைக்களத்துக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.

அரச கொள்கைகளின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி, மூன்று மொழிகளிலும் இந்தப் புதிய கொள்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரசாங்கத்தின் அதிக செலவீனங்களைக் கொண்ட பத்து அமைச்சுகளின் செலவுகள் குறித்த பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த வருட இறுதிக்குள் வெளிவிவகாரக் கொள்கை வரைவைத் தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக நீண்டகாலமாக அவதானத்தைப் பெற்றுவந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மேற்படி அமைச்சின் செயற்பாடுகளை பின்பற்றி ஏனைய அமைச்சுக்களும் தேசிய கொள்கை கட்டமைப்பை பின்பற்ற வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அமைச்சுக்கள் மட்டத்தில் தேசிய கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவது அவசியமானது. அது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் உதவியாக அமையும்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் தேசிய மதிப்பீட்டுக் கொள்கையின் தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதனை நனவாக்க அர்ப்பணிப்புக்களை செய்த அனைவரையும் பாராட்டுகிறேன்.

நிலையான தேசியக் கொள்கை இல்லாதது நாட்டின் ஆட்சி முறையில் காணப்படும் மிகப்பெரிய குறைப்பாடாகும். தேசியக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு பெரும் பொறுப்பு உள்ளது.

இந்தக் கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும். அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பில் வலுவான மதிப்பீடு மிகவும் முக்கியமானது.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை வலுவாக நடைமுறைப்படுத்த அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம். அரச சேவைக்குள் ஒழுக்கத்தையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குவதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நிலையான சூழலை பேணவும் அரசாங்கங்கள் மாறினாலும் நிலைக்கூடியதாக இந்த கொள்கைகள் அமைய வேண்டும்.

இலங்கை இந்தக் கொள்கையுடன் முன்னோக்கிச் செல்லும் போது, ​​தேசியக் கொள்கைகள் தொடர்பில் அதிக இணக்கப்பாடு ஏற்படும் என்றும் அதன் பலனாக விரிவான தேசிய கொள்கை ஒன்றுக்காக வரைவு உருவாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் நம்புகிறோம்.

இந்த தேசிய கொள்கைகளுடன் முன்னோக்கி செல்லும் வழியை திட்டமிடும் தருணத்தில் கடன் நீடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்கரமாக அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

இதன்போது, அரச நிதிக் குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க இணக்கப்பாடுகளை எட்டவும் முடிந்துள்ளது.” என்றும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
மனித குலத்தை அழிக்க ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் ஆபத்தான வைரஸ்?

மனித குலத்தை அழிக்க ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் ஆபத்தான வைரஸ்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.