மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (04) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணிவரை அமுலில் இருக்கும்.
அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளத எனவும் கூறப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








