சட்டவிரோதமான முறையில் விமானம் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 42 வயதுடைய இஹல கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 57,200 சிகரெட்டுகள் அடங்கிய 286 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








