Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

7 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். குழு மீண்டும் கூடியவுடன் அதன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது விரைவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அமைச்சரின் கூற்றுப்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தயார்நிலையிலும் இல்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் தேர்தலை நடத்துவதாயின், தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை அங்கீகரிக்கப்படுவது கட்டாயமானது என ‘பெபரல்’ (PAFFREL) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

50% தொகுதி அடிப்படையிலும், 50% மேலதிகப் பட்டியலிலிருந்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதாயின், எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைய வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செயன்முறைகள் காரணமாக தேர்தல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து தற்போது பல வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு