Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை இவ்வளவு நெருக்கமாக யாரும் பார்த்ததிருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய விண்வெளி முகமை வெளியிட்டுள்ள 3டி வீடியோவில், செவ்வாயின் பிரம்மாண்ட பள்ளங்கள் மற்றும் அகழிகளின் உண்மையான தோற்றத்தைக் கண்டு நீங்கள் வியக்கலாம்.

செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பு எவ்வளவு கரடுமுரடானது என்பதைத் துல்லியமாகக் காட்டும் வகையில், ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

இது கற்பனையாக உருவாக்கப்பட்ட வீடியோ அல்ல; செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ (Mars Express) விண்கலம் அனுப்பிய உண்மையான டேட்டாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆவணம்.

இந்த வீடியோ, மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள ‘High Resolution Stereo Camera’ (HRSC) மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உயர அளவீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

செவ்வாயின் தெற்கு அட்சரேகை 20 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 17 டிகிரி பகுதியில் அமைந்துள்ள ‘ஃபிளாஜர்குவெஸ்’ (Flaugergues) பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இது படம் பிடித்துக் காட்டுகிறது.

சமதளமான புகைப்படங்களை டிஜிட்டல் நிலப்பரப்பு மாதிரிகளுடன் (Digital Terrain Model) இணைத்து, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவு 3டி முப்பரிமாணமாக இந்த வீடியோ மாற்றியுள்ளது.

ஒவ்வொரு வினாடிக்கும் 50 தனித்தனி பிரேம்கள் வீதம் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது.

Hop on board Mars Express, for a flight over Flaugergues Crater.

Be sure to turn up the volume for the audio guide 🔊
More info, images and a map showing the route of the video 👉 https://t.co/b3DpaDOqjs pic.twitter.com/CCGYfJn0Mk

— ESA Science (@esascience) February 4, 2026

நிலப்பரப்பின் மேடு பள்ளங்கள் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது தட்டையாகத் தெரியும் என்பதால், அதன் வடிவங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக நிலப்பரப்பின் செங்குத்து அமைப்பு 3 மடங்கு உயர்த்தி காட்டப்பட்டுள்ளது.

செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் தூசி மற்றும் ஒளி எவ்வாறு சிதறடிக்கப்படுமோ, அதைப் பிரதிபலிக்கும் வகையில் மென்மையான பனிமூட்டம் (Haze) போன்ற ஒரு தோற்றம் 250 கி.மீ தொலைவுக்கு அப்பால் சேர்க்கப்பட்டுள்ளது.

வீடியோவின் தொடக்கத்தில் ‘ஸ்கைலா’ (Scylla) மற்றும் ‘சரிப்திஸ்’ (Charybdis) ஆகிய 2 செங்குத்தான சரிவுகளுக்கு இடையே நீண்ட அகழி போன்ற பகுதி தெரிகிறது.

இது சுமார் 75 கி.மீ அகலமும், 1 கி.மீ ஆழமும் கொண்டது. பண்டைய காலத்தில் செவ்வாயின் ஓடு (Crust) விரிவடைந்தபோது இது உருவானது.

வீடியோவில் 150 கி.மீ அகலமுள்ள ‘பாகுய்சென்’ பள்ளத்தையும், அதைத் தொடர்ந்து வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 240 கி.மீ அகலமுள்ள பிரம்மாண்டமான ‘ஃபிளாஜர்குவெஸ்’ பள்ளத்தையும் காணலாம். இந்தப் பள்ளத்தின் தரைப் பகுதியானது சுமார் 1 கி.மீ உயரத்திற்குச் செங்குத்தாக உயர்ந்து கரடுமுரடாகக் காணப்படுகிறது.

காலம் மற்றும் புவியியல் மாற்றங்களால் செவ்வாய் கிரகம் எவ்வாறு ஆழமான வடுக்களைப் பெற்றுள்ளது என்பதை இந்த வீடியோ தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

இது வெறும் காட்சி விருந்து மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்தின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான அறிவியல் ஆவணமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
செய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

September 4, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

September 4, 2026
முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!
செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

September 4, 2026
இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு!

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி
செய்திகள்

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

September 3, 2026
Next Post
வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.