Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!

உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!

3 years ago
in செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரையும், அவருக்கு போலி சான்றிதழை வழங்கியவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக சம்பளம் பெற்று வந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகைமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தினால் குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி நபரை, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று சனிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
அரசாங்கத்தின் மீது பாரிய மென்பொருள் தாக்குதல்!

அரசாங்கத்தின் மீது பாரிய மென்பொருள் தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு