Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் அகதி வாழ்க்கை வேண்டாம்; இலங்கைக்கு வாருங்கள் – நாமல் அழைப்பு

இந்தியாவில் அகதி வாழ்க்கை வேண்டாம்; இலங்கைக்கு வாருங்கள் – நாமல் அழைப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்னிந்தியாவில் வசிக்கும் 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும், ஸ்திரத்தன்மை, கௌரவம் மற்றும் பாதுகாப்பான சட்ட அந்தஸ்தை எதிர்பார்க்கும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு இக்கோரிக்கை நம்பிக்கையளிக்கிறது.

எனினும், இக்கோரிக்கையானது உண்மையான மனிதாபிமான அக்கறையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை இலக்காகக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் நாங்கள் உண்மையாக நம்புகிறோம். ஏனெனில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான காலகட்டங்களில் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பாக நாடு திரும்புவதை எமது அரசாங்கம் தொடர்ந்து எளிதாக்கியது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அவர்கள் தமது தாய்நாட்டில் கௌரவமாகத் தமது வாழ்க்கையைக் மீளக்கட்டியெழுப்புவதற்குப் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது தமிழக முகாம்களில் இருந்து நாடு திரும்ப விரும்புவோர் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. நாடு திரும்ப விரும்புவோரின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் கவனமாகப் பரிசீலித்து, தேவையற்ற தடைகளின்றி அவர்கள் சமூகத்துடன் இணைவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி, இங்கு உரிமையுள்ள குடிமக்களாக வாழ முடியும்.

இந்த 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கு நாமே பொறுப்பு. இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களையும், தமிழக அரசாங்கத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களினதும் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையிலான நிலையான தீர்வொன்றை நோக்கி நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்,” என நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
இலங்கையில் ‘டிஜிட்டல் நோமட் விசா’ அறிமுகம்; வெளிநாட்டு தொழில்வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்பு

இலங்கையில் ‘டிஜிட்டல் நோமட் விசா’ அறிமுகம்; வெளிநாட்டு தொழில்வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.