Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ‘டிஜிட்டல் நோமட் விசா’ அறிமுகம்; வெளிநாட்டு தொழில்வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்பு

இலங்கையில் ‘டிஜிட்டல் நோமட் விசா’ அறிமுகம்; வெளிநாட்டு தொழில்வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்பு

7 months ago
in செய்திகள்

இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa – DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கையை நீண்டகாலம் தங்கியிருந்து பணியாற்றும் ஒரு இடமாக மாற்றுவதும், சுற்றுலா மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள், அவர்களின் துணைவர் மற்றும் சார்ந்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இலங்கைக்கு வெளியே உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் (Freelancers) அல்லது வெளிநாட்டில் வணிகம் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் மாதம் குறைந்தது 2,000 அமெரிக்க டொலரை வருமானமாகப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் இந்த விசா ஓராண்டு செல்லுபடியாகும் என்பதுடன், ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கவும், வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கவும், சொத்துக்களை வாடகைக்கு எடுக்கவும், பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்க்கவும் இந்த விசா அனுமதிக்கிறது.

அத்துடன் பிரதான விண்ணப்பதாரர் மற்றும் அவரை சார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 500 அமெரிக்க டொலர் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதனைப் பெறுவதற்குக் கடவுச்சீட்டு, மருத்துவச் சான்றிதழ், காவல்துறை நற்சான்றிதழ், வருமானச் சான்று மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பரிந்துரை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விசா வைத்திருப்பவர்கள் இலங்கைக்குள் உள்ளூர் நிறுவனங்களில் பணிபுரிய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதுடன் விதிமுறைகளை மீறினால் விசா ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு