Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் கந்துவட்டி கொடுமை; முன்னாள் பெண் போராளி சிறுநீரகம் விற்கும் நிலை

மன்னாரில் கந்துவட்டி கொடுமை; முன்னாள் பெண் போராளி சிறுநீரகம் விற்கும் நிலை

4 months ago
in செய்திகள்

யுத்த களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண், தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ முறையில் பணம் கட்டியுள்ளார்.

ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர்.

ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.

மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் “பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார்.

சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் “இன்னும் வட்டி மீதமுள்ளது” எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
மட்டு கல்லடியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்ட சிவராத்திரி இசை நிகழ்வு

மட்டு கல்லடியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்ட சிவராத்திரி இசை நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.