தென்னிந்தியாவின் பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிக்கிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட மாபெரும் பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று (17) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையிலும் பல்லாயிரக்கணக்கான இசை இரசிகர்கள் மத்தியில் இந்த பக்தி இசை நிகழ்வு நடைபெற்றது.
























மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கடற்கரையில் 15ஆம் திகதி தொடக்கம் சிவலிங்க தரிசனம் நடைபெற்றுவந்த நிலையில் இறுதிநாளான நேற்று மாலை இந்த பக்தி இசை நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆன்மீக ரீதியான கருத்துரைகளும் நடைபெற்றதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.








