Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

அதன் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சுற்றாடல் அறிக்கை பெறப்படவில்லை என்பது தெரியவந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் அமையவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்ட காலத் திட்டத்தின் கீழ் மண்டைதீவு தீவை சர்வதேச தரத்திலான வசதிகளைக் கொண்ட ஒரு ‘விளையாட்டு நகராக’ மாற்றுவது குறித்த திட்டமும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு நகர் நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளை உள்ளடக்கிய முழுமையான உள்ளக விளையாட்டு அரங்கு, நட்சத்திரத் தரம் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தகத் தொகுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களையும் உள்ளடக்கியதாக அமையும்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக போட்டிகளை நடாத்தக்கூடிய வகையில் மைதானமும் அரங்கும் நிர்மாணிக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் பிரதான பார்வையாளர் அரங்கு மற்றும் ஊடகப் பிரிவு அறையும், மூன்றாம் கட்டத்தின் கீழ் ஏனைய பார்வையாளர் அரங்குகளை நிர்மாணிப்பதற்கும், இறுதிக்கட்டத்தில் மின்னொளி தொகுதியை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச சபையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 40,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிக்க முடியும்.

அத்துடன் சர்வதேச தரத்திலான பகல்/இரவு போட்டிகளை நடாத்தும் வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடாத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
Next Post
மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.