வாத்துவ – மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேர்ந்தபோது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இரு சாரதிகளில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








