Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த 54 வயதுடைய சட்டத்தரணி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் 1996ஆம் ஆண்டு சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்தவர் எனத் தெரியவந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவமுள்ள ஒரு சட்டத்தரணி போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகநபரான சட்டத்தரணியிடமிருந்து 130 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (22.02.2026) முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு